Wednesday, February 24, 2010

இன்றேனும் சொல்லிவிடு

உன் பார்வையில் பதுங்கியிருக்கும்
ஆயிரம் பொருள்களுக்குள்
அல்லாடுகிறேன் நான் !

உன் சிரிப்பில் சிக்கி
சிதரிவிடாமலிருக்க
சிரமப்படுகிறேன் நான் !

உன் வனப்பில்
மயங்கி விழுந்து
மூர்ச்சையாகிறேன் நான் !

போதுமடி அவஸ்தை
இன்றேனும் சொல்லிவிடு
என்னை
என்ன செய்வதாய் உத்தேசம் !!!

போ என சொல்
செத்துப்போகிறேன்
பொறு என சொல்
யுகயுகமாய் காத்திருக்கிறேன்
மற என மட்டும் சொல்லாதே
நடமாடும் பிணமாய் இருப்பதில்
நாட்டமில்லை எனக்கு !!!

3 comments:

  1. "நடமாடும் பிணமாய் இருப்பதில்
    நாட்டமில்லை எனக்கு"

    அருமையான வரிகள். . .
    வாழ்த்துக்கள் தோழா

    ReplyDelete
  2. வாழ்த்திய இதயங்களுக்கு நன்றி..

    ReplyDelete
  3. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

    http://blogintamil.blogspot.in/2014/11/b.html

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    ReplyDelete